அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைய இரண்டு மாத கெடு விதித்த தினகரன், அக்கெடு முடிந்ததும் அதிரடியாக அதிமுகவின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன மாதிரி அவர் நியமனம் செய்த நிர்வாகிகளில் சிலர் தங்களுக்கு அந்த பதவி வேண்டாமென்று அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருசிலரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்து தனது அதிரடியை மீண்டும் தொடங்கியுள்ளார் தினகரன்
இதன்படி விழுப்புரம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் திருச்சி பெல் நிறுவன அண்ணா தொழிற்சங்கத்திற்கும் புதிய நிர்்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் இந்த செயல் அ.தி.மு.க.வின் இரு அணியினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது