நடிகர் ரஜினிகாந்திற்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் “பாஜகவின் கதவுகள் ரஜினிக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது. அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி முதலில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.