அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இன்று இணைந்துவிடும் என்று 99 சதவிகிதம் அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இணைப்பு விழா நடைபெறாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஓபிஎஸ் அவர்களின் தர்மயுத்தம் இன்று வெற்றி பெறும் வாய்ப்பு அதிகளவு இருந்தபோதும், ஏதோ ஒரு சக்தி இந்த இணைப்பை நடத்தவிடாமல் சதி செய்ததாகவும், அந்த சக்தி ஓபிஎஸ் அருகிலேயே இருப்பதால் இந்த இணைப்பில் சுணக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
ஓபிஎஸ் அணிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி தர ஈபிஎஸ் அணி ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த இரண்டு பதவி ஓபிஎஸ், மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவருக்கு மட்டுமே செல்லும் என்றும், 3வது ஒரு பதவி கிடைத்தால் மட்டுமே இணைப்புக்கு சம்மதிக்க வேண்டும் என்றும் அப்போழுதுதான் தனக்கு பதவி கிடைக்கும் என்று அந்த சக்தி முட்டுக்கட்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் அவர்களின் தர்மயுத்தத்தின் வெற்றியை அந்த மர்மயுத்தம் குழப்பிவிட்டதாகவே கூறப்படுகிறது.