இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான தீர்மானத்தை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவேற்றினர்.
இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. எனவே அவரின் ஒப்புதலை பெறுவதற்காக, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்து தீர்மானத்தின் நகலை அவரிடம் கொடுத்தனர்.
அந்த நகலை சோகம் ததும்பும் முகத்துடன் வாங்கிய சசிகலா, அவர்களிடம், அக்கா இடத்தில் நானா? என கேட்டுள்ளார். அதற்கு தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள், ‘அம்மாவுக்கு பின் உங்களை விட்டால் யாருமில்லை’ என்றும் கூறினார்களாம்.
அதன் பின் தன்னுடைய அறைக்குள் சென்ற சசிகலா சில நிமிடங்கள் வெளியே வரவில்லையாம். அதன் பின் வெளியே வந்த சசிகலா, தீர்மானத்தின் நகலை அங்கிருந்த ஜெ.வின் உருவப்படத்தின் கீழ் வைத்து அழுதபடி அஞ்சலி செலுத்தினாராம். அதன் பின்பே அவர் தன்னுடய சம்மதத்தை தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.