Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இடைத்தேர்தல் நிறைவு; இறுதி நிலவரம் - அரவக்குறிச்சியில் 81.92 சதவீத ஓட்டுப்பதிவு

இடைத்தேர்தல் நிறைவு; இறுதி நிலவரம் - அரவக்குறிச்சியில் 81.92 சதவீத ஓட்டுப்பதிவு
, சனி, 19 நவம்பர் 2016 (17:54 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு  நடைபெற்றது.


 


 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. துவக்கம் முதலே அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. 
 
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 81.92 சதவீதம் பதிவாகியுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி,

அரவக்குறிச்சி - 81.92
 
தஞ்சாவூர் -69.02
 
திருப்பரங்குன்றம் -70.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 
அதேபோல், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில், நெல்லித்தோப்பு பகுதியில் 85.76 சதவீதம் ஓட்டுப் பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெர்முடா முக்கோணம்: அவிழ்ந்த மர்ம முடிச்சில் புதிய திருப்பம்