தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கமான ஒருசில பைல்களில் கையெழுத்து போட்டுவிட்டு '73 நாட்களில் 1570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருப்பதாக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரு மாதங்கள் நெருங்கப் போகும் வேளையில் கூட துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டாத முதலமைச்சர் தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்கிறது என்று கூறியிருப்பதை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன்.
ஆகவே அ.தி.மு.க ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இது போன்ற “பகட்டான” பேச்சுக்கள் மூலம் மறைக்க முயலாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தனது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்