முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணை, அதிகாரத்திற்கு பயந்து முடங்கி போயிருந்த தமிழக அமைச்சர்கள், தற்போது சுயமாக சிந்தித்து வித்தியாசமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர்.
பாடதிட்டங்கள் மாற்றம், பிளஸ் 1 பொதுத்தேர்வு, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு விதமான சீருடைகள் என அசத்தி வரும் கல்வித்துறை தற்போது இன்னொரு அசத்தலான காரியத்தை செய்துள்ளது. அதுதான் இனிமேல் பாடபுத்தகங்களை வாங்க கடைகளிலோ, கல்வி நிறுவனத்திற்கோ சென்று வரிசையில் காத்திருக்க வேண்டாம், இணையதளத்தில் சென்று முழு பாட புத்தகங்களையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு, மாணவர்களின் அனைத்து வகுப்பு பாட நூல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் PDF வடிவில் www.textbooksonline.tn.nic.in என்ற இணைய முகவரியில் சென்று மாணவர்கள் தங்களுக்கான பாடப் புத்தகங்களை அறிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் இந்த பாட புத்தகங்களை மாணவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த புதிய முயற்சிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.