முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு முன்பும், பின்பும் சசிகலாவின் ஆதரவாளர்களில் ஒருவராகவே இருந்தவர் தீபக். குடும்பச்செலவுக்கு பணம், தொழில் என எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்றதும் தலைகீழாக மாறிவிட்டது.
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தினகரனும், தீபக்கும் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்திக்க சென்றபோது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றிவிட்டதாம். அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை தினகரனுக்கு கொடுத்ததும் தீபக்கை உறுத்தவே, உடனே ஊடகங்களில் தன்னுடைய மாறுதலான வெளிப்பாட்டை பேசத்தொடங்கிவிட்டார்.
குறிப்பாக போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதா அல்லது சசிகலா ஆகிய இருவரையும் தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது தீபக்கின் எண்ணமாம். இதனால் விரைவில் தீபக், தீபாவுடன் இணைந்து சசிகலா குடும்பத்திடம் இருந்து போயஸ் கார்டன் வீட்டை மீட்க நீதிமன்றம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.