Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கேக் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த பெண்

கேக் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த பெண்
, திங்கள், 27 ஜனவரி 2020 (15:00 IST)
ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
 
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது.
 
அறுபது வயது பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நொடிகளில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்தார் என கூறப்படுகிறது.
 
லேமிங்டன் என்னும் கேக் வெண்ணெய்யால் செய்யப்பட்டு சாக்லேட் சாஸால் கோட்டிங் செய்யப்பட்டு உலர்ந்த தேங்காய் துருவல் தூவப்பட்டிருக்கும். இந்த சம்பவம் நடக்கும் முன் லேமிங்டன் கேக்கை போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிடுவது படம் பிடிக்கப்பட்டது.
 
உயிரிழந்த பெண் அசௌகரியங்களை உணரும் முன்பு, போட்டி நடைபெற்ற இடத்தில் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டார் என நேரில் பார்த்த சில சாட்சியங்கள் கூறுகின்றனர்.
webdunia
அந்த காணொளியில் சம்பவம் நடக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரும் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். போட்டியாளர்களுக்கு முன் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது.
 
இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஹெர்வே ஹோட்டல் சார்பில் ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இந்த சம்பவம் நிகழ்ந்த போது ஆம்புலன்ஸின் சேவைக்காக நன்றியும் தெரிவித்திருந்தனர். 
 
ஆஸ்திரேலியா நாளுக்காக கேக் உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவது அங்கு மிகவும் பிரபலமாகும். முதல் முறையாக ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததை குறிக்கும் விதமாக ஆஸ்திரேலியா நாள் கொண்டாடப்படுகிறது.
 
குறிப்பிட்ட நேரத்தில் லேமிங்டன் கேக், பைஸ், ஹாட் டாக் போன்ற உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு போட்டியாளர்கள் இதில் பரிசுகளை வெல்வார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த விஷயத்தில் திமுகவை முந்த முடியாது! – அமைச்சர் ஜெயக்குமார்!