கொரோனா வைரஸ் குறித்த அனைத்து தகவல்களையும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த பிபிசி புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி வருகிறது.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஊடகங்கள் பல்வேறு தகவல்கலை மக்களுக்கு வழங்கி வருகின்றன. ஆனாலும் சமூக வலைதளங்களில் நம்பகமற்ற தகவல்களும் வலம் வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் இந்த நூற்றாண்டின் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என பிபிசி கருதுகிறது.
இதற்காக பிபிசி இணையதளத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள், உலக நாடுகள் கொரோனா வைரஸ் குறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் என அனைத்தையும் தொகுத்து வீடியோவாக வழங்கி வருகிறார்கள்.
இதுகுறித்து பிபிசி உலக சேவையின் இயக்குனர் ஜேமி ஆங்கஸ் “ஊரடங்கால் வீட்டில் அடைந்துள்ள இளைஞர்கள், மாணவர்கள் கொரோனா குறித்து முழுவதுமாக அறிந்து கொள்வது அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் சொல்வதற்கு உபயோகமாக இருக்கும். இந்த இக்கட்டான சூழலில் கொரோனா குறித்து தெரிந்துகொள்வது அவசியம்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து பிபிசி மை வோர்ட் யுடியூப் சேனலின் தயாரிப்பாளர் ஏஞ்சலினா ஜோலி “இப்போது உள்ள குழந்தைகள் இரண்டாம் உலக போரை பார்த்ததில்லை. ஆனால் அதை விட அபாயமான ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே உண்மை செய்திகளையும், தகவல்களையும் தெரிந்து கொள்வது அவசியம்” என கூறியுள்ளார்.
பிபிசி மை வேர்ல்ட் நிகழ்ச்சிகளை காண,,,