டிஃபோர்ஸ் எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்தில் திருடப்பட்ட பணம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.
கிரிப்டோகரன்சிகளாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் இணையதளம் ஒன்றில் இருந்து சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை இணையவழியில் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
திருடப்பட்ட பணம் பெருமளவில் திரும்ப டிஃபோர்ஸ் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டாலும், திருடப்பட்ட வகை கிரிப்டோகரன்சிகளாக அல்லாமல் வெவ்வேறு வகை கிரிப்டோ கரன்சிகள் மூலம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சீனாவிலிருந்து இயங்கும் டிஃபோர்ஸ் எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்தில் திருடப்பட்ட பணம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது. பணத்தை திருடியவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதால் அவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் மிண்டோ யாங் தெரிவித்துள்ளார்.