ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் சங்கத்தின் (USGS) விபரப்படி 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் திங்கள் கிழமை ஏற்பட்டன.
மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் இறந்து கிடந்தவர்களில் நான்கு குழந்தைகளும் உள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எப்.பியிடம் தெரிவித்தார்.
பிற்பகலில் முதல் நிலநடுக்கமும், தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 2வது நில நடுக்கமும் ஏற்பட்டது. காதிஸ் மற்றும் முகர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும், அங்கு பல குடியிருப்புகள் உறுதியானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.