இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பந்து வீசும் முகமது ஷமி.
Image caption: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பந்து வீசும் முகமது ஷமி.
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
முன்னதாக, 240 ரன்களுக்கு எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா நிர்ணயித்திருந்தது.
கேப்டன் டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்ததன் மூலம் தென்னாப்பிரிக்க அணி எளிதான வெற்றியை உறுதி செய்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களும் எடுத்தன.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என அளவில் தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது.
முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது.