Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

யுக்ரேன் Vs ரஷ்யா: 20 ஆம் நாளை எட்டிய போர் - இதுவரை நடந்தது என்ன?

யுக்ரேன் Vs ரஷ்யா: 20 ஆம் நாளை எட்டிய போர் - இதுவரை நடந்தது என்ன?
, செவ்வாய், 15 மார்ச் 2022 (14:35 IST)
யுக்ரேன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு இன்று 20 ஆம் நாளை எட்டியிருக்கிறது.

 
இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பாகவும் பிரச்னையை முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்க இன்று ஐந்தாம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கு மத்தியில் யுக்ரேனிய தலைநகர் கீயவை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிகள் தொடர்கின்றன. இதுவரை அங்கு என்ன நடந்தது என்பதை சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.
 
1. யுக்ரேனில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற ஏதுவாக ரஷ்ய ராணுவ தாக்குதல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
2. யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூற்றுப்படி, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை துருக்கியில் செவ்வாய்க்கிழமை தொடரும்.
 
3. யுக்ரேனை தாக்க ரஷ்யாவுக்கு சீனா உதவினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 
 
4. சீனாவிடம் ஆயுதங்களை வழங்க ரஷ்யா கோரியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சில அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ரஷ்யாவும் சீனாவும் மறுத்துள்ளன.
 
5. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொடர்புடைய மேலும் 100 பேர் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளது.
 
6. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பரவலாக நடந்த தாக்குதலின் பாதிப்பை காட்டும் படங்கள் வெளியாகி உள்ளன.
 
7. பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்து 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து தப்பித்து அண்டை நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
 
8. போரின் தொடக்கத்தில் இருந்து 1.75 மில்லியன் மக்கள் யுக்ரேனில் இருந்து போலாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டின் எல்லைக் காவல் அமைப்பு திங்கள்கிழமை கூறியது.
 
9. யுக்ரேனின் சமீபத்திய தாக்குதல் நகரான மேரியோபோலில் சிக்கியிருந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி ஒன்று வெளியேறிவிட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத் தொடரணியில் 160 க்கும் மேற்பட்ட மக்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது.
 
10. 33 ரஷ்ய கோடீஸ்வர தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது. இவர்களில் பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் பெயரும் உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!!