இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலையில் தொடங்கியது.
வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு வைக்கப்படும் 'இங்க்' எங்கு தயாராகிறது என்பது குறித்து பார்ப்போம்.
தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஷயம் மை. ஒருவர் வாக்களித்தாரா என்பதை எளிதில் அறிய 'அழியா மை' குறிப்பிடத்தக்க அளவில் உதவுகிறது.
நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது இடது கையின் ஆள்காட்டி விரலில் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் அதிகாரி அழியா மையை பூசுவார். ஒரு வேளை இடது கையின் ஆள்காட்டி விரல் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அந்த விரலே இல்லையெனில் வேறு ஏதாவது விரலில் அந்த மையை வைக்க முடியும்.
இந்தியாவில் இரண்டு முக்கிய நிறுவனங்கள் இந்த மை தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிட்டட் (MPVL) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராயுடு லெபாரட்டரிஸ் நிறுவனமும் மை தயாரிப்பில் ஈடுபடுகின்றன.
'' நாங்கள் அழியாத மையை தயாரிக்கிறோம். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 நாடுகள் எங்களது மையை பயன்படுத்துகின்றன. தென் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், நைஜீரியா, ஓமன், மாலத்தீவுகள், ருவாண்டா, எத்தியோப்பியா உள்ளிட்டவை எங்களது முக்கிய வாடிக்கையாளர்கள்'' என்கிறார் ராயுடு லெபாரட்டரிஸ் சிஇஓ ஷஷாங்க்.
''போலியோ சொட்டு மருந்து திட்டத்திலும் இந்த அழியா மை பயன்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் எங்கள் நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்திருக்கிறது'' என்கிறார் ஷஷாங்க்.
Where is the Inc to be held for the election
Where is the ,Inc, to be held ,for the election,தேர்தலுக்கு ,வைக்கப்படும், இங்க் ,எங்கு ,தயாராகிறது,போலியோ சொட்டு ,