தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Y பிரிவு பாதுகாப்பின் கீழ் அவருக்கு 8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள், அதில் இரண்டு கமாண்டோ படையினரும் அடங்குவர்.