மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஆண்டில் 139 சிக்ஸர்கள் அடித்து, சக நாட்டு வீரரான கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.
கடந்த சனிக்கிழமை நடந்த கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி வெறும் 43 பந்துகளில் 97 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த போட்டியில் 9 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கெய்லின் சாதனையை பூரன் முறியடித்தார். 28 வயதான பூரன் நடப்பாண்டில் இதுவரை 58 டி-20 போட்டிகளில் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் கெய்ல் 2015 ஆம் ஆண்டு 36 டி-20 போட்டிகளில் 135 சிக்சர்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் சிக்ஸர்கள் அடித்த சாதனைப் பட்டியலில் நிக்கோலஸ் பூரன், கெய்லை மிஞ்சினார் என்பது குறிப்பிடத்தக்கது.