இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி 207 ரன்களை டார்கெட்டாக வைத்துள்ளது.
டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பமே அடித்து ஆட முயன்றது. ஆனால் பவர்ப்ளே முடிவதற்கு 3.5வது ஓவரில் டூ ப்ளெசிஸ் விக்கெட் விழுந்தது. வில் ஜாக்ஸும் அதிர்ச்சிகரமாக 6 ரன்களில் அவுட் ஆனார். கோலியும், பட்டிதாரும் நின்று விளையாடி ஆளுக்கு ஒரு அரைசதம் வீழ்த்தி அணியின் ரன்களை உயர்த்தினர்.
கேமரூன் க்ரீன் 20 பந்துகளுக்கு 37 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவர் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்து 207 ரன்களை சன்ரைசர்ஸ்க்கு டார்கெட் வைத்துள்ளது.
இது ஆர்சிபி அணிக்கு ஐபிஎல்லில் 250வது போட்டி என்பதால் இதில் ஆர்சிபி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் சன்ரைசர்ஸின் கடப்பாறை லைன் அப்பிற்கு 200+ ரன்கள் என்பது சாத்தியமான எளிய இலக்கே. எனினும் ஆர்சிபி பவுலிங்கில் மேஜிக் நிகழ்த்தினால் வெல்லும் வாய்ப்பு உள்ளது.