நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நடைபெற்று வரும் பகல்- இரவு டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்தாகியது.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆக்லாந்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஒவர்களில் 58 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக போல்ட் 6 வீக்கெட்டுகளையும், சவுத்தி 4 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 92.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார், நிக்கோலஸ் 49 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அப்போது சரியாக 3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், பலத்த மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.