இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.
67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 189 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி 45 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது.