சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அணி. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணிக்கு கேப்டனாகவும் , பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸும் மெக்கல்லமும் பதவியேற்ற பின்னர்தான்.
குறிப்பாக பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியாக ஆடும் தன்னுடைய இந்த அனுகுமுறைய இங்கிலாந்து அணிக்கும் கடத்தியுள்ளார். அதனால் அவரை சகவீரர்கள் அழைக்கும் பாஸ்(baz) என்ற சொல்லை வைத்து பாஸ்பால் என இந்த அனுகுமுறையை ஊடகங்கள் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஸ்பால் என அழைக்கப்படுவது பற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “நாங்கள் அந்த பதத்தை பயன்படுத்துவது இல்லை. அது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்தப் பதம் எங்களுக்கு பிடிக்கவில்லை. ஏன் மெக்கல்லமுக்கே அந்த வார்த்தையை விரும்பவில்லை. அந்த பதம் எங்கள் மீது திணிக்கப்படும் போதெல்லாம் நாங்கள் இப்படிதான் கிரிக்கெட் விளையாடுவோம் எனக் கூறி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.