சமீபத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்திய அணியைச் சர்வ சாதாரணமாக நினைத்த இங்கிலாந்து அணிக்குத் தக்கப் பதிலடி கிடைத்துள்ளதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.
எனவே, வரும் 3 வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் 15 வீரர்களைக் கொண்ட புதிய அணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், லார்ட்ஸ்-ல் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய பந்து வீச்சாளர் பும்ரா, மற்ற வீரர்களுக்கு மட்டும் 136 கிமீ வேகத்தில் வீசிவிட்டு, தனக்கு மட்டும் 145 கிமீ வேகத்தில் வீசியதாகக் கூறி பும்ராவிடமே இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆண்டர்சன் புலம்பியுள்ளதகத் தகவல் வெளியாகிறது.