மும்பை இந்தியன்ஸ் வீரர் கைரன் பொல்லார்ட் விக்கெட்டை திட்டமிட்டு கைப்பற்றினார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா டாஸ் வென்று, பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், வர்மா 51 ரன்களும், ஷோகீன் 25 வ், பொல்லார்ட் 14 வ, உங்கட் 19 ரன்ளும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் கடைசி நேர அபார ஆட்டத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் பேட் செய்துகொண்டிருக்கும் போது, அவரை வீழ்த்த தோனி பேட்ஸ்மேனுக்கு நேராக எல்லைக் கோட்டில் ஒரு பீல்டரை நிறுத்தினார். அப்போது பொல்லார்ட் அடித்த பந்து நேராக அந்த பீல்டருக்கு சென்று கேட்ச் ஆனது. இதுபோல முன்பே தோனி பொல்லார்ட்டின் விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.