ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டர் போட்டியில் இன்று ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டர் போட்டியில் இன்று ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்தது.
டேவிட் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆட்டமிழந்த பின் அணியின் ரன் வேட்டை குறைவிட்டது. அதிகபட்சமாக வார்னர் 35 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி பீல்டிங் களத்தில் அனல் பறந்தது.
குறைவாக ஸ்கோரில் ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்தியது கொல்கத்தா அணி. இது கொல்கத்தா அணிக்கு அடுத்து எளிதாக வெற்றிப்பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.