இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
வாஷிங்டன் சுந்தர் கொரொனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.