உலக டென்னிஸ் தொடரில் முக்கியமானது விம்பிள்டன் போட்டி தற்போது லண்டனில் நடந்து வருகிறது.
இத்தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா –மேட் பாவிக் ககோடி – டெசிரெ கிராசி - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில், சானியா மிர்சா – மேட் பாவிக் ஜஜோடி 6-4.5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தனர்.
இதுகுறித்து சானியா மிர்சா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாம் கொடுத்த உழைப்பு என்பது ம்திப்பிற்குரியது. இந்த முறை போராடித் தோல்வி அடைந்திருக்கிறேன். இந்த முறை விம்பிள்டன் கோப்பை எனக்கானது இல்லை என தோன்றவில்லை. ஆனால், 20 ஆண்டுகளாக இங்கு விளையாடி வருவது பற்றி பெருமைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.,