இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியை எதிர்கொள்வது குறித்து கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர்.
இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 21 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் அவரின் ஓவரில் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஆடாமல், அடித்து ஆட வேண்டும் என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “டி 20 போட்டிகளில் எப்படியும் நீங்கள் அவுட் ஆகாமல் இருக்க முடியாது. அதனால் அவுட் ஆகிவிடுவோமோ என அஞ்சாமல் அடித்து ஆட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.