இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி Eleven Gods And A Billion Indians என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஐபிஎல் போட்டியின் போது வெளியிட உள்ளார்.
இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட்டை பற்றியும், இந்திய அணிக்கு கிரேக் சேப்பல் பயிற்சியாளராக பதவியேற்றதும், இந்திய அணியின் ஏற்பட்ட மாற்றங்களும் தனக்கு அணியில் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்களை பற்றியும் எழுதியுள்ளார்.
கிரேக் செப்பல் பற்றி அந்த புத்தகத்தில் கங்குலி எழுதியுள்ளது பின்வருமாறு, கடந்த 2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே தொடரின் போது கிரேக் என்னிடம் அணி வீரர்களின் பட்டியலை காட்டினார். அதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன், காரணம் அதில் அணியின் முக்கிய வீரர்கள் யாருமே இல்லை.
இந்திய கிரிக்கெட்டில் அவரது அணுகுமுறை வேறு விதமாக இருந்தது. ஆனால், அவை அனைத்தும் எதிர்வினை ஆற்றக்கூடியதாக எனக்கு தோன்றியது. இதனால் அவரது முடிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது.
அவர் இந்திய அணியை கிரேப் செப்பல் அணியாக மாற்ற நினைத்தார் என்பது புரிந்து கொண்டு சுதாரித்துக்கொண்டே. இல்லையேல் அப்பொழுதே எனது கிரிக்கெட் பயணம் முடிந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.