ரிஷப் பாண்ட் இந்திய அணியின் சொத்து என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை கிங்ஸ் - பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், லக்னோ ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரிஷப் பாண்ட் இந்திய அணியின் சொத்து என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ரிஷப் பாண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்து வருகிறார்.எதிர்வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அவர் விளையாடினால், மிகவும் சிறப்பாக இருக்கும என்று தெரிவித்தார்.
மேலும், அவர் இந்திய அணியின் சொத்து! ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.