நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.
ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்டஹ் நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்திருந்தது. சேஸிங் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது.
ஏற்கனவே பாயிண்ட்ஸ் டேபிளில் தடுமாறி வரும் மும்பை அணிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சக ப்ளேயர்களின் திட்டமிடல் குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதை நிரூபிக்கும் விதமாக அணியின் தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியபோது “மும்பை அணி ப்ளேயர்கள் அனைவரும் தங்களது குறைகளை உணர்ந்து அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றதும் அணியை விட்டு நீக்குவது எனக்கு பிடிக்காது.
எல்லா வீரர்களையும் ஆதரிப்போம். திலக் வர்மா, நெஹல் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருந்தாலும் கடைசியில் சிறப்பாக விளையாடியிருந்தால் 10-15 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை” என பேசியுள்ளார்.
அவர் இவ்வாறு பேசியுள்ளது ப்ளேயர்களை அடிக்கடி மாற்றுவதில் விருப்பமில்லை. அதனால் சிறப்பாக விளையாட முயலுங்கள் என்று மறைமுகமாக சக ப்ளேயர்களை சொல்வது போல உள்ளதாகவும், இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவே பேட்டிங்கில் 10 பந்துக்கு 10 ரன்களில் அவுட் ஆனதுடன், பவுலிங்கிலும் 2 ஓவர்க்கு 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காமல்தான் விளையாடினார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.