10 நாடுகள் பங்கேற்கும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. நேற்றைய முதல் லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 194 ரன்களை குவித்தது.
இந்நிலையில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நாளை 2 வது ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் மகளிர் அணி பலவீனமாக உள்ளதால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, இந்திய அணி எளிதில் பாகிஸ்தனை வீழ்த்தி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.