Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; மழை பெய்தாலும் போட்டி உண்டு!? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விதிவிலக்கு!

India Pakistan
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:05 IST)
ஆசியக்கோப்பை போட்டிகளில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆசியக்கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதன் தகுதி சுற்று ஆட்டங்களில் முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியுடன் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பிரித்து அளிக்கப்பட்டன. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் 4 தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த போட்டிகளில் வரும் 10ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. ஆனால் அன்றைய தினத்தில் அந்த பகுதியில் 90% மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டியும் முழுதாக நடக்காதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விதிவிலக்கு அறிவித்துள்ளது. ஒருவேளை அன்றைய தினம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கு இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த இரு அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு… காரணம் சொல்லும் முத்தையா முரளிதரன்!