குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜார்கண்ட வீரர் ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஐபிஎல். உலகில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது.
இதில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜார்கண்ட வீரர் ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குஜராத் அணியால் ரூ.3.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார் ராபின் மின்ஸ். ரூ.20 லட்சம் அடிப்படை விலை கொண்ட 21 வயதாகும் மின்ஸை எடுக்க, மும்பை குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது. இவரது தந்தை விமான நிலையத்தில் காவலாளியாக இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.