ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. அதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை ஒன்றினைத்து பயிற்சி கொடுக்க விரும்புகின்றன.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகளின் இறுதியில் நாடு திரும்பினர். இதனால் ஜோஸ் பட்லர், மொயின் அலி, பேர்ஸ்டோ, லியான் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பினர்.
இதனால் அவர்களை ஏலத்தில் எடுத்திருந்த அணிகளுக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து டி 20 அணி கேப்டன் ஜோஸ் பட்லர் “என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் ஐபிஎல் தொடர் நடக்கும் போது எந்தவொரு சர்வதேச போட்டிகளையும் வைக்கக் கூடாது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் மிக நீண்டகாலமாக நடந்து வருகிறது. தேசிய அணிக்காக விளையாடுவதுதான் முக்கியம். உலகக் கோப்பைக்காக அணியை வழிநடத்துவதுதான் முதல் விருப்பம்” எனப் பேசியுள்ளார்.