சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கோயங்காவுக்கு எதிராகவும் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இதனால் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும், அடுத்த சீசனில் அவர் லக்னோ அணிக்காக விளையாட மாட்டார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் தங்கள் அடுத்த ஐபிஎல் போட்டியை விளையாட லக்னோ அணி டெல்லிக்கு சென்றுள்ளது.
அந்த அணியோடு கேப்டன் கே எல் ராகுல் டெல்லி செல்லவில்லையாம். இதனால் அவர் அணி நிர்வாகத்தின் மேல் அதிருப்தியடைந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர் இன்று டெல்லி சென்று அணியோடு இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. சஞ்சீவ் கோயங்கா வீரர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக விளையாடிய தோனியைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தைக் கேப்டனாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.