தற்கால கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான பார்மட்களிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி. விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ரன்மெஷின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸி அணிக்கு எதிரான பேட்டிங்கின் போது அவர் சர்வதேசப் போட்டிகளில் 25000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் ஆறாவது வீரராக நுழைந்துள்ளார் கோலி. இதற்கு முன்னர் சச்சின், காலிஸ், சங்ககரா, ரிக்கி பாண்டிங் மற்றும் மகேலா ஜெயவர்த்தனா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுத்துள்ள கோலி, இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். இந்நிலையில் இன்று இந்தூரில் நடக்கும் டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் அவர் விளையாடும் 200 ஆவது டெஸ்ட் போட்டி ஆகும்.