நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் நியுசிலாந்து சில போட்டிகளில் தோற்றதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக அமைந்தது. அதே போல பாகிஸ்தான் அணியும் வெளியேறியது.
இந்நிலையில் நியுசிலாந்து அணி தங்கள் கடைசி போட்டியில் பப்புவா நியு கினியா அணியோடு விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த இன்னிங்ஸின் சிறப்பாக பந்துவீசிய நியுசிலாந்து வீரர் லோக்கி பெர்குஸன் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் அனைத்து பந்துகளையும் டாட் பாலாக வீசினார். அவர் இந்த இன்னிங்ஸில் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.