ஐபிஎல் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அவருக்கு அடுத்தபடியாக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸி அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அவர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கட்டுபெட்டித்தனமான அணியான ஐதராபாத் ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை செலவு செய்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்க்கு இவ்வளவு பெரிய தொகையை சும்மா செலவு செய்யவில்லையாம் ஐதராபாத் அணி நிர்வாகம். அவரை SRH அணிக்குக் கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற ஐதராபாத் அணி அதன் பிறகு இறுதிப் போட்டிக்குக் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் உலகக் கோப்பை வென்ற அவரைக் கேப்டனாக்கி கோப்பையை வெல்லும் முனைப்பில் ஐதராபாத் அணி இருக்கும் என தெரிகிறது.