2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.
இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது.
இந்நிலையில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தனக்கு உடன்பாடு இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இதுபற்றி “எனக்கு இந்த புதிய விதியில் உடன்பாடு இல்லை. கிரிக்கெட் என்பது 11 வீரர்களைக் கொண்டதே தவிர, 12 வீரர்களைக் கொண்டதல்ல. சுவாரஸ்யத்துக்காக கிரிக்கெட்டின் முக்கிய அம்சம் கைவிடப்படுகிறது. இதனால் சில வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பளிக்கப்படுவதில்லை” எனக் கூறியுள்ளார்.