ஆசியக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹை வோல்டேஜ் போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்க உள்ளது.
இதற்கு முன்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் மோதி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடக்கும் போட்டி பற்றி பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “பாகிஸ்தான் அணியில் உள்ளது போல எங்களிடம் பவுலர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் எங்களிடம் ஷமி, பூம்ரா மற்றும் சிராஜ் போன்ற தங்களை நிரூபித்த பவுலர்கள் உள்ளார்கள். இது எங்களுக்கு சாதகமான அறிகுறியாகும். இவர்கள் களத்தில் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தினாலே போதுமானது” எனக் கூறியுள்ளார்.