கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸிலும் நடந்தது.
நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடி அவுட்டான போது கே எல் ராகுல் களத்தில் இருந்தார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் வழக்கம்போல சொதப்பி வெளியேறினார்.
இதனால் அவரை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு, சர்பராஸ் கானை அவரது இடத்தில் நிரந்தர வீரராக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். கொடுக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தும் சர்பராஸ் கானை ஏன் முழுவதும் இந்திய அணி பயன்படுத்திக் கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.