இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் கிடையாது என்றால் வர்த்தகத்தையும் நிறுத்துங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரே நடைபெறாமல் இருக்கிறது. இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தொடர்ந்து பேசி வருகிறார்.
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் “இந்தியா – பாகிஸ்தான் இடையே டேவிஸ் கோப்பை விளையாடலாம், கபடி விளையாடலாம். ஆனால் கிரிக்கெட் மட்டும் விளையாடக்கூடாதா? இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினையை கிரிக்கெட்டில் காட்ட வேண்டாம். பாகிஸ்தான் இந்திய வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதம் குறித்து சச்சின், சேவாக் போன்றோரிடம் கேட்டுப் பாருங்கள். இரு நாடுகளுக்கிடையே வெங்காயம், தக்காளி கூட பரிவர்த்தனை ஆகின்றன. கிரிக்கெட் வேண்டாமென்றால் வர்த்தகத்தையும் நிறுத்தி கொள்ள வேண்டியதுதானே! இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகவும் அவசியமானது” என கூறியுள்ளார்.