Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

யாரு ஷமியை பத்தில் தப்பு தப்பா பேசுறது? – பொங்கியெழுந்த ஷேவாக்!

யாரு ஷமியை பத்தில் தப்பு தப்பா பேசுறது? – பொங்கியெழுந்த ஷேவாக்!
, திங்கள், 25 அக்டோபர் 2021 (15:06 IST)
நேற்றைய உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி விளையாடியது குறித்து பேசியவர்களுக்கு ஷேவாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்து வீசிய இந்திய பவுலர்களில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 ஓவர்களுக்குள் 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவரது அடையாளம் குறித்து பலரும் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷேவாக் ”சமூக வலைதளங்களில் சமூக வலைதளங்களில் நடக்கும் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் ஷமிக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர் ஒரு சாம்பியன் மற்றும் இந்திய தொப்பியை அணியும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஆன்லைனில் இழிவாக பேசுபவர்களை விட மிகவும் இந்தியாவை இதயத்தில் தாங்குபவர்கள்தான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானிடம் தோற்றாலும் சாதனை படைத்த கேப்டன் கோலி!