சமீபத்தில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நெஞ்செலும்பு பகுதியில் அடிபட்டு அதற்கடியில் இருந்த மண்ணீரலில் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது.
இரத்தக்கசிவு தொடர்ந்து இருந்ததால் அவசரமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது ஓய்வில் இருந்து வரும் ஸ்ரேயாஸ் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக அவ்வப்போது போட்டிகளில் விளையாட முடியாமல் அவதிப்படுகிறார். அது அணியில் அவரின் நிலைத் தன்மையை பாதிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.