கடந்த சில போட்டிகளாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த இரு போட்டிகளிலும் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கேப்டன் ரோஹித் ஷர்மாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில் “சூர்யகுமார் யாதவ்வின் திறமையை வீணாக்காதீர்கள் ரோஹித் ஷர்மா. அவர் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடுகிறார். உலகக்கோப்பையில் அந்த இடத்தில்தான் விளையாடவேண்டும். இப்படி செய்து அவரின் தன்னம்பிக்கையை குலைத்து விடாதீர்கள். உங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கி, இஷான் கிஷானை எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.