ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முக்கிய போட்டியாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்களை 252 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 86 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து வந்தாலும், அந்த அணியின் குசால் மெண்டிஸ் நிலைத்து நின்று 91 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் இறுதி ஓவரில் பரபரப்பாக போட்டி செல்ல இலங்கையின் அசலங்கா சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இலங்கை அணியும் 42 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் சேர்த்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.