இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது.
குறிப்பாக நான்காவது இடத்தில் யாரை இறக்குவது என்ற குழப்பம் உள்ளது. அந்த இடத்தில் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை மாற்றி மாற்றி இந்திய அணி பரிசோதனை செய்து வருகிறது. ஆனால் இன்னமும் அந்த இடத்துக்கு நிரந்தரமான வீரர் தயாராகவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. அதில் “ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இல்லையென்றால், அவருக்கு பதிலாக திலக் வர்மாவை இறக்கலாம். அவருக்கு அனுபவம் இல்லை என்றாலும், ஏற்கனவே இந்திய அணியில் பல அனுபவம் மிக்க வீரர்கள் இருப்பதால் அதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம்” எனக் கூறியுள்ளார்.