நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இப்போது சொதப்பி வருகிறது. அந்த அணி இனிவரும் இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும். சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது.
தோனி இந்த சீசனில் எட்டாவது பேட்ஸ்மேனாக சில போட்டிகளில் ஒன்பதாவதாக இறங்குகிறார். இந்நிலையில் தோனியின் இந்த முடிவுக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தசைநார் கிழிவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பப் போட்டிகளில் லேசாக இருந்த அந்த கிழிவு இப்போது பெரிதாகியுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுத்துக் கொள்ள சொன்னபோதும் தோனி அதை ஏற்காமல் விளையாடி வருகிறாராம். அணியில் டெவன் கான்வே இருந்திருந்தால் தோனி கண்டிப்பாக ஒரு பிரேக் எடுத்திருப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தோனியின் பேட்டிங் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் “ நான் தோனியின் பேட்டிங் பொசிஷன் பற்றி பேச விரும்பவில்லை. அவர் எங்கு பேட்டிங் செய்தாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. சி எஸ் கே அணி தோற்றால் என்ன ஜெயித்தால் ரசிகர்களுக்கு என்ன?... தோனி ரசிகர்களை மகிழ்விக்கிறார். அது போதும் அவர்களுக்கு” எனக் கூறியுள்ளார்.