Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

Advertiesment
சஞ்சு சாம்சன்

vinoth

, புதன், 12 நவம்பர் 2025 (08:18 IST)
கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது சஞ்சு சாம்சன் – ஜடேஜா டிரேட் பேச்சுவார்த்தை. ஆனால் ஜடேஜாவை சென்னை அணி ட்ரேட் செய்யக் கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாகவும், முன்னால் வீரர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஏனென்றால் ஜடேஜா சென்னை அணிக்காகப் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்ததே ஜடேஜாதான். அதனால் தோனி அவரை டிரேட் செய்ய அனுமதிக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றன.

இந்த டிரேட் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த டிரேடை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரண் ஆகியோரைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

டிரேட் முடிந்தாலும் ஏன் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் அதில் ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிக்கல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் வெளிநாட்டுப் பிளேயர்களின் ஒதுக்கீடு ஏற்கனவே முழுமையாக உள்ளது. இப்போது சாம் கரண் அணிக்குள் வரவேண்டுமென்றால் அந்த அணி சில வீரர்களை விடுவிக்க வேண்டும். இப்போது அந்த அணி தீக்‌ஷனா மற்றும் ஹசரங்கா ஆகியோரை விடுவிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் பிறகு டிரேட் முடிவு அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!