டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய பவுலர்கள் 96 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆடியபோது, ஒரு பவுன்சர் அவரின் தோள்பட்டையைத் தாக்கியதால் வலியால் அவதிப்பட்டார். அவரை இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் பரிசோதித்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து ஆடமுடியாத சூழல் ஏற்பட்ட போது அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
மோசமான ஆடுகள வடிவமைப்புதான் இதுபோல வீரர்கள் காயம் படுவதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் ஷர்மா இப்போது குணமாகி வருவதாகவும் ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.